ஈரோடு காசிபாளையம் நேரு வீதியில் வீணாகும் குடிநீர்
ஈரோடு காசிபாளையம் நேரு வீதியில் குடிநீர் வீணாகிறது.
ஈரோடு காசிபாளையம் நேரு வீதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதில் இருந்து பீறிட்டு வெளியேறும் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.