காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகில் படகுகளை பழுது பார்க்கும் இடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய பைப்பர் படகு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது கடல்காற்று வேகமாக வீசவே தீ மள மளவென எழுந்து அருகில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளிலும் பரவி கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ராயபுரம், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.