மாநில அளவிலான வளைபந்து போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு
மாநில அளவிலான வளைபந்து போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கரூரில் மாவட்ட அளவிலான வளைபந்து போட்டி நடைபெற்றது. இதில், கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டளை பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் மாநில அளவிலான வளைபந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று தேர்வாகி உள்ளனர். இதையடுத்து மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பிச்சை முத்து, சுப்பிரமணி ஆகியோரையும், விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ரூசோ, ஆலோசகர் முருகானந்தம் ஆகியோர் பாராட்டினர்.