தென் மண்டல தடகள போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

தென் மண்டல தடகள போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-09-27 18:20 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் மாவட்டத்தை சார்ந்த 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கல்லூரி மாணவி பூஜா குண்டு எறியும் போட்டியிலும், கல்லூரி மாணவர் விக்னேஷ் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதன் மூலம் 2 பேரும் வருகிற 15-ந்தேதி தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் தென் மண்டல தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரையும் கரூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்