தேசிய அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வு

தேசிய அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2022-06-19 17:49 GMT

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்டேர் அமெச்சூர் போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்டம் அமெச்சூர் கிக் பாக்சிங் சார்பாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 6 மாணவ, மாணவிகள் தங்கம் பதக்கமும், 3 மாணவ, மாணவிகள் வெள்ளி பதக்கமும், 4 மாணவ, மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றனர்.

இதையடுத்து போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை தலைமை பயிற்சியாளரும், கரூர் மாவட்ட அமெச்சூர் கிக்பாக்சிங் செயலாளருமான ரவிக்குமார், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வளார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர். மேலும் இப்போட்டியில் ெவன்ற 2 மாணவிகள், ஜூன் 21 முதல் 25-ந்ேததி வரை கொல்கத்தாவில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், ஈடன் கார்டனில் நடைபெறும் தேசிய அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்