தடகள போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை
தடகள போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்நடைபெற்றது. இதில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி கிருத்திகா 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், மாணவி கரினாநல்லி 100 மீட்டர் மற்றும் தடை தாண்டுதலில் வெண்கல பதக்கத்தையும், மாணவி இலக்கியா வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், பெண்களுக்கான 400- 100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஆண்கள் பிரிவில் கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளை கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேந்திரன், அனைத்து பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.