கரூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி: 13-ந்தேதி நடக்கிறது.

கரூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-07-09 18:08 GMT

கேரம் போட்டி

தமிழக அரசின் திட்டமான கேரம் விளையாட்டு போட்டி உள்ளரங்க விளையாட்டுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். கேரம் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தில் உள்ள கேரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமைகளை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் நோக்கில் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணியளவில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை பிரிவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டும் கேரம் போட்டியில் கலந்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (போனபைட்) சான்றிதழ் பெற்று வர வேண்டும். வெற்றிபெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு தொகையினை அவரவர் வங்கிக்கணக்கில் டி.பி.டி. / ஆர்.டி.ஜி.எஸ். முறையில் செலுத்தப்படும்.

விண்ணப்பம்

ஆகையினால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கின் முழு விவரங்களை கொண்டு வர வேண்டும். தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.இவற்றில் தங்களது வங்கிக் கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோடு, வங்கியின் முகவரி தெளிவாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் இணையதள முகவரி www.tnsports.org.in/wepapp/login.asps online Entry மூலம் மட்டுமே வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.

பரிசு

ஒரு பள்ளியில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ஒற்றையர் போட்டியில் ஒருவரும், இரட்டையர் போட்டியில் இருவரும், அதேபோல முதுநிலை பிரிவில் ஒற்றையர் போட்டியில் ஒருவரும், இரட்டையர் போட்டியில் இருவரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒற்றையர் போட்டியில் கலந்து கொள்பவர் இரட்டையர் போட்டியிலோ, இரட்டையர் போட்டியில் கலந்து கொள்பவர் ஒற்றையர் போட்டியிலோ கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒற்றையர் பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு முதலிடம் ரூ.1,000-ம், 2-ம் இடம் ரூ.500-ம், 3-ம் இடம் ரூ.250-ம், இரட்டையர் பிரிவில் முதலிடம் ரூ.2,000-ம், 2-ம் இடம் ரூ.1,000-ம், 3-ம் இடம் ரூ.500- வழங்குவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்