கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-24 19:03 GMT

எம்.ஜி.ஆர். நினைவு நாள்

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கரூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தோகைமலை மேற்கு ஒன்றியம்

தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து தோகைமலை பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு தோகைமலை ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் லதா, ஒன்றிய துணை செயலாளர் துரைகவுண்டர், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணி

தோகைமலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரெத்தினவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்