கரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-04-06 19:14 GMT

கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் 18 லட்சம் உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. பலமாக இருந்தது. அவருக்குப்பின் இந்தியாவில் 3-வது பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை மாற்றி காட்டியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே 53 லட்சமாக உயர்த்தி காட்டினார். அவருக்கு பின்னர் இந்த இயக்கம் அழிந்துவிடும், மறைந்துவிடும் என்று ஏளனம் செய்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரது உத்தரவின்படி தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்பது இலக்காகும். கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும், என்றார்.

கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாழ்த்து தெரிவிப்பது, கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அமைப்பு செயலாளர் சின்னசாமி, கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்