வாயில் கருப்பு துணி கட்டி கிராமசபையில் பங்கேற்ற மக்கள்

Update: 2023-08-15 18:10 GMT


சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அவினாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் காணாங்குளம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சிலர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருடக் கணக்காக எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அங்கு வந்து இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்