கருங்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம்
கருங்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம் நடைபெறறது.
ஸ்ரீவைகுண்டம்:
வைணவ கோயில்களில் தினமும் நடைபெறுகிற பூஜைகளில் விடுதல்கள் இருப்பின் பரிகாரமாக ஆண்டு தோறும் பவித்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கு அனைத்து சந்நிதி பெருமாள் தாயார்கள், கிருஷ்ணர், ஆழ்வார், ராமானுஜர், கருடன், அனுமன் ஆகயோருக்கு பவித்ரோத்ஸவம் மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு வெங்கடாஜலபதி திருமஞ்சனம், காலை 9 மணிக்கு, தீபாராதனை, காலை 10 மணிக்கு வெங்கடாஜலபதி ஸ்ரீதேவிபூதேவி தாயார்களுடன் யாகசாலைக்கு எழுந்தருளினர். அன்று மதியம் 12 மணிக்கு திரவியங்கள், பழங்கள், நெய், தேன் போன்ற பொருட்கள் கோவிலை சுற்றி வந்து பூர்ணாகுதி நடந்தது. இதில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உட்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.