ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை மும்முரம்

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

Update: 2022-08-25 20:55 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. அதுபோல் நேற்று கூடிய சந்தைக்கு ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இதில் 200 எருமை மாடுகள், 300 பசு மாடுகள் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதேபோல் 100 கன்றுக்குட்டிகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

ரூ.75 ஆயிரம்

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறுகையில், "சந்தையில் கன்றுக்குட்டி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது. எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும் விலைபோனது. கேரளா உள்பட வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். இதனால் 90 சதவீத மாடுகள் விற்பனையானது", என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்