ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.

Update: 2023-06-15 21:27 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தேனி, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

90 சதவீத மாடுகள்

350 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் விலை போனது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.

நேற்று கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்