தர்மபுரி மாவட்டம் முழுவதும் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனறு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-29 15:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான்மாது, தங்கமணி, தானேந்திரன், மாநில நிர்வாகிகள் கீரை விசுவநாதன், ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகிற 3-ந் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும், மாணவ-மாணவிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், ஆறுமுகம், டாக்டர் பிரபு ராஜசேகர், சிவப்பிரகாசம், செங்கண்ணன், சித்தார்த்தன், சந்திரமோகன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பொன் மகேஸ்வரன், முத்துலட்சுமி, சிவகாமி, தேசிங்குராஜன், ரஜினி மாறன், முல்லைவேந்தன், காசிநாதன், சுருளிராஜன், அரூர் நகர நிர்வாகி முல்லை ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முனிராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்