நாகியம்பட்டியில், அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலை நள்ளிரவில் அகற்றம்

நாகியம்பட்டியில், அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது.

Update: 2022-06-03 20:51 GMT

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அடுத்துள்ள நாகியம்பட்டி கிராமத்தில் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பீடம் அமைத்து அதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை வைத்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டது குறித்து தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நாகியம்பட்டி கிராமத்தில் வைத்திருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை நள்ளிரவில் அகற்றினர்.

மேலும் அங்கு அகற்றிய சிலையை ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை அனுமதியின்றி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பரபரப்பான சூழல் நிலவியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்