கருணாநிதி நினைவு தினம்: மாவட்டம் முழுவதும் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

கருணாநிதி நினைவு நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Update: 2022-08-04 13:04 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தி.மு.க தலைவராக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு முதல் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை 19 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராகவும் பணியாற்றியவர் கலைஞர்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டவர். தாய்மொழி தமிழுக்கு செம்மொழி பெருமையை பெற்றுத்தந்தவர். வளரும் தலைமுறையின் எதிர்காலத்தை வளப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்ட தலைவர் கலைஞரின் 4-வது ஆண்டு நினைவுதினம் வருகிற 7-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்றைய தனம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கழக அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வட்டங்களிலும், நகர, பேரூர் வார்டுகளிலும், ஒன்றியங்களில் உள்ள 199 ஊராட்சிகளில் முக்கிய சந்திப்பகளிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் உருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.

அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கழக மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள் கழக முன்னணியினர் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்