கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அங்கு கருணாநிதியின் பிரமாண்ட படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, துணை செயலாளர்கள் நாகராஜன், மார்க்ரெட்மேரி, பிலால்உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஒன்றியக்குழு தலைவர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், நகர பொருளாளர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி ஒன்றியம்
சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோபால்பட்டி, சாணார்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் பல்வேறு கிராமங்களில் கருணாநிதி உருவ படத்துக்கு மலர் தூவியும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கோபால்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கருணாநிதி உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க அவைத்தலைவர் திருமுருகன், துணை செயலாளர்கள் பார்வதி, காளியப்பன், பொருளாளர் ஜான்பீட்டர், மாவட்ட பிரதிநிதிகள் ரகுபதி, சுரேஷ், பாலுச்சாமி, வேம்பார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதேபோல் சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பிலும் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல், நகராட்சி அலுவலகம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர அவைத்தலைவர் மரிய ஜெயந்தன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் முகமது நயினார், நகர துணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, கோமதி, நகராட்சி கவுன்சிலர்கள் ஆண்டவர் அப்பாஸ், கலாவதி தங்கராஜ், தேவி செல்வராஜ், அருள்சாமி, வக்கீல்கள் அணி நிர்வாகி சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோவன், சுதாகர் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் தங்கராஜ் உள்பட நகர தி.மு.க. நிர்வாகிகள், கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் தெற்கு ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் வேடசந்தூர் பஸ்நிலையம் அருகே கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் காந்திராஜன் எம்.எம்.ஏ. கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைசெல்விமுருகன், தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், எரியோடு பேரூர் தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவ படத்துக்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தார்.
பழனி
இதேபோல் பழனி அருகே புளியம்பட்டி நால்ரோட்டில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், மாநில மாணவர் அணி துணை செயலாளருமான கா.பொன்ராஜ் தலைமை தாங்கினார். புளியம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் கதிர்வேல், தி.மு.க. கிளைச் செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுலோச்சனா சோமு, கட்சி நிர்வாகிகள் செல்லமுத்து, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.