கருணாநிதி நூற்றாண்டு விழா- அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2023-05-18 05:54 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வட சென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வரும் 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்