திருப்பத்தூரில் மாணவரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா

திருப்பத்தூரில் மாணவரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

Update: 2023-06-29 19:00 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, முன்னாள் அமைச்சர் தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ்ரூசோ, மணிமுத்து, சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் செந்தில்குமார், நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், சுப்பிரமணியன் மாணிக்கம், நகரச்செயலாளர்கள் நெற்குப்பை பழனியப்பன், கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சோமு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர மாணவரணி அமைப்பாளர் அபுதாகீர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்