முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்

கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19-ந்தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Update: 2023-08-16 20:45 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாகவும், எழுச்சியோடும் நடத்துவதற்கு தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தமிழின தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், அனைத்து அணி செயலாளர்கள், அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்