கருணாநிதி பிறந்த நாள் விழா
வாணியம்பாடி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் நடந்தது.;
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு, நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கருணாநிதி உருவப்படத்திற்கு நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் தலைமை தாங்கினார்.
நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஒடிசா மாநில ெரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் தென்னரசு, பத்மாவதி, அவைத்தலைவர் முஹம்மத் ஜான், ஜூபிடர் சுந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் ஷாஹீன்பேகம் சலீம், தவுலத், சித்ரா தென்னரசு, பல்கீஸ் சலீம், கலைச்செல்வன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.