கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அகரம் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் புதிய காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்று. நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலையில் புனித நீரை கோவில் விமானத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. மாலையில் கருமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, நையாண்டி மேளம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.