கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வேப்பனப்பள்ளி அருகே திம்மசந்திரத்தில் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-02-10 18:45 GMT

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரத்தில் புதிதாக கருமாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கை பூஜை, கோமாதா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா சங்கல்பம் நடைபெற்றது. நேற்று முன்தினம் துஜாரோகனம் பூஜை, சாமிகள் யாகசாலை பூஜை, அம்மன் பிரதிஷ்டை, நவகிரக ஆராதனை, கலச பூஜை, பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாலையில் இருந்து புனித நீர் கோவிலை சுற்றி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றியபோது 3 கருடன்கள் கோவில் மேலே வந்து வட்டமிட்டன. இதை கண்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். பின்னர் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி, மாணவரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்