தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்

கள்ளக்குறிச்சியில் தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது.

Update: 2022-06-13 17:15 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருடசேவை உற்சவ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன அலங்காரம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கருட சேவை வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்