லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திருவிழா
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்றது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்று வருகிறது. கார்த்திகை இரண்டாம் வாரத்தை முன்னிட்டு யோக நரசிம்மர், அமிர்தவல்லி தாயார், யோகா ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தக்கான்குளம் பிரம்மதீர்த்ததில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.