சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது.;

Update: 2022-11-20 20:38 GMT

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அடுத்த மாதம்(டிசம்பர்) 6-ந் தேதி தீபத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி தேருக்கு அருகில் எழுந்தருளுவார். பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தகவலை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்