கார்த்திகை தீபத்திருவிழா
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலிலும் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது.