தேசிய கொடியை கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஏற்றினார்

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஏற்றினார்.

Update: 2023-01-26 18:49 GMT

காரைக்குடி, 

குடியரசு தினத்தையொட்டி காரைக்குடி சட்டமன்ற அலுவலகம், காங்கிரஸ் கட்சி அலுவலகம், மகர்நோன்பு திடல், ராஜீவ்காந்தி சிலை, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், சண்முகதாஸ், தட்சணாமூர்த்தி, கனிமுகமது, சீனி, ரமேஷ், வக்கீல் ராமநாதன், ராஜேஷ், சேவியர், செல்வரத்தினம், ஜெயபிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்