கார்த்தி சிதம்பரம் எம்.பி. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
தேவகோட்டை
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில், மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, துணைத் தலைவர்கள் அப்பச்சி சபாபதி, பூமிநாதன், தேவகோட்டை நகர் கிழக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சஞ்சய், மாநில இலக்கிய அணிச் செயலாளர் காரை சுவாமிநாதன், வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நகரத் தலைவர் லோகநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.