கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை புதுத்தெரு அருகே அண்ணா நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூைஜகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கற்பக விநாயகர் கோவில் மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.