மரத்தில் தூக்குப்போட்டு கர்நாடக வாலிபர் தற்கொலை

மரத்தில் தூக்குப்போட்டு கர்நாடக வாலிபர் தற்கொலை

Update: 2023-03-13 18:45 GMT

கோவை

கோவை மத்திய சிறை அருகே, மைதானம் உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மரத்தின் அருகே கிடந்த அவரது பையை திறந்து போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாலிபர் கல்லூரியில் படித்ததற்கான சான்றிதழ்கள் இருந்தன.

கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த சுகேஷ் (வயது25) என்று தெரியவந்தது. பட்டதாரியான சுகேஷ், வேலை தேடி கோவை வந்து இருக்கலாம் என்றும், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்