கர்நாடக வனத்துறையினர் தொல்லை கொடுக்க கூடாது

Update:2023-03-20 01:00 IST

மேட்டூர்:-

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வந்திருந்தார். அப்போது அவரி சந்தித்த மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தமிழக-கர்நாடக மாநில எல்லையான அடிப்பாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும்போது கர்நாடக வனத்துறையினர் அத்துமீறி வருகின்றனர். எனவே அவர்களுக்கு வனத்துறையினர் தொல்லை கொடுக்ககூடாது என்று வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் மாதேஸ்வரன் மலையில் தமிழக- கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கர்நாடக அரசு சார்பில் சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு பத்மினி சகோ, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார், தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்ட வன அலுவலர் செல்வகுமார், சதாசிவம் எம்.எல்.ஏ., மேட்டூர் தாசில்தார் முத்துராஜா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்