கர்நாடகா-மத்திய அரசை கண்டித்து நாளை மறியல் போராட்டம் நடத்த முடிவு

கர்நாடகா-மத்திய அரசை கண்டித்து நாளை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 20:57 GMT

மலைக்கோட்டை:

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பா.ஜ.க. மற்றும் அமைப்புகள், தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தின் சார்பில் நாளை(புதன்கிழமை) காவிரிப்படுகை மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் போராட்ட ஆயத்த கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை.சிவசூரியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி படுகை மாவட்டங்களில் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் குறித்து இன்று(ெசவ்வாய்க்கிழமை) காலை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் சத்திரம் பஸ் நிலையம் வரையும், மாலையில் மத்திய பஸ் நிலைய பகுதிகளிலும் பிரசாரம் செய்வது. நாளை காலை தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்துவது. இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழாதன், புல்லட்லாரன்ஸ், த.மு.மு.க. பிரதிநிதிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட தலைவர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்