கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பாவூர்சத்திரம் கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-10 12:23 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோ பூஜை, கஜபூஜை, விநாயகர் பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து கற்குவேல் அய்யனார் சுவாமி விமான கோபுரம், விநாயகர், கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இக்கோவிலில் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி சார்பில் குமார், முருகேசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்