கரியகோவிலில் 54 மில்லி மீட்டர் மழை பதிவு
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கரியகோவிலில் 54 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கரியகோவிலில் 54 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பரவலாக மழை
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், சூரமங்கலம், கன்னங்குறிச்சி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக மாநகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு இரவில் சிறப்பு வழிபாடு நடந்தபோது மழை பெய்ததால் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலத்தில் பெய்த இந்த மழையால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
கரியகோவில்
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கரியகோவிலில் 54 மில்லி மிட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு-35.8, காடையாம்பட்டி-34, ஆத்தூர், சங்ககிரியில் -28, தலைவாசல்-26, வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையத்தில்-25, கெங்கவல்லி-21, ஆணைமடுவு-19, ஓமலூர்-13.60, தம்மம்பட்டி-11, சேலம்-10.50, மேட்டூர்-4.40, எடப்பாடி-2 ஆகும். சேலம் மாநகரில் வெயிலின் அளவு ஓரளவு இருந்தது. பிற்பகலுக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.