மணம்தவிழ்ந்தபுத்தூர் சக்தி விநாயகர் கோவிலில் கரிநாள் திருவிழா

மணம்தவிழ்ந்தபுத்தூர் சக்தி விநாயகர் கோவிலில் கரிநாள் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-01-17 18:45 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே மணம்தவிழ்ந்தபுத்தூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கரிநாள் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சக்தி விநாயகருக்கு பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் புதுப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்