கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டை வழங்கும் விழா

கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2023-05-22 18:47 GMT

அண்டக்குளம், ஆதனக்கோட்டை, பெருங்களூர் ஆகிய கிராமங்களில் உள்ள கராத்தே மையங்களில் கராத்தே, சிலம்பம், வேல்கம்பு, வால்வீச்சு போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றோர்களை வைத்து நடத்தப்படும் கராத்தே பயிற்சியில் 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் மஞ்சள் பட்டை, பச்சை பட்டை, ஆரஞ்சு பட்டை ஊதாபட்டை, அரக்குபட்டை, கருப்பு பட்டை உள்ளிட்ட பட்டைகளை வழங்கும் விழா ஆதனக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் முதுநிலை கராத்தே பயிற்றுனர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டைகளை வழங்கினார். மாணவர்கள் குரு வணக்கம் செலுத்தி பட்டையை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தர அடிப்படையில் பட்டையை பெற்றுக் கொண்டனர். விழாவில் புதுக்கோட்டை தலைமை பயிற்சியாளர்கள் சண்முகம், முத்து, ஆதனக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், குப்பையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமலையாண்டி, வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி சாமியய்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தமிழ்வாணன் மற்றும் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்