கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Update: 2023-07-28 18:45 GMT

திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் ரத்தப்பரிசோதனை, இசிஜி பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்டவைகளை மருத்துவக்குழுவினர் செய்தனர். இதில் 1018 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன், ஊராட்சி துணைத்தலைவர் பாலு, ஊராட்சி செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 5 மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளும், சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 5 கர்ப்பிணிப்பெண்களுக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்