கந்தாம்பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

கந்தாம்பாளையம் மற்றும் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-09-29 22:01 GMT

கந்தாம்பாளையம் மற்றும் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்

அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

மேலும் இந்த திட்டத்தில் பெருந்துறையை அடுத்த நசியனூா் அருகே உள்ள கந்தாம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக, நீரை கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 20 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக கந்தாம்பாளையம் பகுதியில் ராட்சத எந்திரங்களை கொண்டு, குழாய்களை பதிக்க 10 அடி ஆழம் உள்ள குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

அமைச்சர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் அந்த பகுதியில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ.சதீஸ்குமார், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.பி.சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சின்னச்சாமி, கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன், செயலாளர் பெரியசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மணிராசு, விவசாயிகள் சங்க தலைவர் பெரியவேலப்பன், திட்டப்பணிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஜெகதீசன், சந்திரசேகர், பழனிசாமி மற்றும் பெருந்துறை தாசில்தார் அமுதா, துணைத் தாசில்தார் சுந்தராம்பாள், வருவாய் ஆய்வாளர் ஜாகித்கான், பொதுப்பணி துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

பவானி

இதேபோல் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதிக்கு வந்த அமைச்சர் சு.முத்துசாமி அங்கு நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளி என்ற இடத்துக்கு சென்ற அவர் அங்கு பணிகள் நிறுத்தப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்