கான்சாபுரம் விநாயகர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜை
கான்சாபுரம் விநாயகர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.;
எட்டயபுரம்:
எட்டயபுரம் கான்சாபுரம் பால விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால விநாயகருக்கு இளநீர், பன்னீர், தேன் போன்ற 16 வகையான ெபாருட்களால் அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. பூஜையில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.