கான்சாபுரம்தேவி பத்திரகாளியம்மன் கோவில்புதிய கட்டிடத்துக்கு வாஸ்து பூஜை
கான்சாபுரம் தேவி பத்திரகாளியம்மன் கோவில் புதிய கட்டிடத்துக்கு வாஸ்து பூஜை நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் கான்சாபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட தேவி பத்திரகாளி அம்மன் கோவில் புதிய கட்டிடத்துக்கு வாஸ்து பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜையும், காலை 8.54 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேவி பத்ரகாளியம்மன் கோவில் புதிய கட்டிட பணிகளுக்கான வாஸ்து பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கான்சாபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பிரகாஷ், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கீழ ஈரால் காமாட்சி அம்மன் கோவில் தர்மகர்த்தா சீனி சாமி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.