கண்ணகி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

மங்லதேவி கண்ணகி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடந்தது.

Update: 2023-04-21 18:45 GMT

கூடலுார் அருகே தமிழக- கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை கம்பத்தில் நடந்தது.

கூட்டத்தில், வருகிற 23-ந்தேதி மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா கொடியேற்றம் நடத்துவது, தெல்லுக்குடி பாதைக்கான தமிழக வனத்துறை ஆய்வை விரைவில் முடித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர், சீர்மரபினர் நலச்சங்கத்தினர், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்