ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சன்னதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 22). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று திருவண்ணாமலை அருகே ஆடு மேய்க்க சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்ப வந்தன. ஆனால் கோவிந்தராஜ் வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி சென்ற போது திருவண்ணாமலை அருகே கண்மாயில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜீன் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.