கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு
கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு என்று பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பதாகை
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் குழுவின் சார்பில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செல்லும் கீழ்பவானி பாசன பிரதான கால்வாய் பகுதிகள் மற்றும் பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சித்தம்பலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலக வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு
தமிழ்நாடு அரசு கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இல்லை என்றால் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை கீழ்பவானி பாசன விவசாயிகள் புறக்கணிப்போம்.
எனவே கடந்த 2020-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.