தொண்டமாநத்தத்தில்கஞ்சி கலய ஊர்வலம்

தொண்டமாநத்தத்தில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-08-16 18:45 GMT


பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள தொண்டமாநத்தத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 40- வது ஆடிப்பூர கஞ்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடைபெற்றது. பின்னர் ஆடை தானம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக காலையில் சக்தி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில் மாலதி கிருபானந்தன், வட்டத் தலைவர் முருகன் செல்வராஜ், முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்