டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பெண் வாகனத்தில் தனியாக பயணிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது

டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பெண் வாகனத்தில் தனியாக பயணிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-01-03 06:06 GMT

புதுடெல்லி

டெல்லி அமன்விகார் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே புத்தாண்டையொட்டி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அஞ்சலி சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஸ்கூட்டியில் நேற்று முன்தினம் அதிகாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அவரது கால் காரின் டயரில் சிக்கியது.

இதன் பின்னரும் காரை நிறுத்ததாத டிரைவர், அந்த பெண்ணின் சடலத்தை சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு மேல் இழுத்துச்சென்று விட்டார். சுல்தான்புரியில் இருந்து கஞ்சவாலா பகுதி வரைக்கும் இந்த கொடூர செயலை அவர் அரங்கேற்றினார்.

கஞ்சவாலாவில் சிக்கிய அந்த காரில் இருந்து, இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காரில் இருந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் கார் டிரைவர் போதையில் ஓட்டி வந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இளம்பெண்ணின் உடல் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் இழுத்துச்செல்லப்படும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்தவர்களின் மிருகத்தனமான இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அஞ்சலியில் சடலம் அரை நிர்வாண கோலத்தில் இருந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இது விபத்துதான் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

கல் நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த சம்பவம் டெல்லியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் வேறொரு பெண்ணுடன் இருப்பது போன்ற புதிய சிசிடிவி காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் மிட்டல், தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன் மற்றும் மிதுன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இளம் பெண் ஒருவர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த இளம் பெண் இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்லவில்லை என்றும் அவர் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து சென்றார் என்றும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்