கனியாமூர் கலவரம்: மேலும் 3 வாலிபர்கள் கைது

கனியாமூர் கலவரம் தொடா்பாக மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2022-08-27 17:01 GMT


சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில், போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தேவி கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் பிரகாஷ் (வயது 24), கல்வீசி தாக்குதல் நடத்திய கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் இந்திரா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் செந்தமிழன் (27), பங்காரம் கிராமம் பாலன் மகன் முரளி (32) ஆகியோரை கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்