கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-09-24 12:35 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.

இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்