சாதனை மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் சாதனை மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2023-06-29 18:45 GMT

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நேத்ரா பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி .நேரில் அழைத்து, தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

இதேபோன்று, கோவில்பட்டி கவுனியன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் ேதர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி எம். ஐஸ்வர்யா மீனாட்சி 600-க்கு 594 மதிப்பெண்களும், மாணவி என். ஜோதி 600-க்கு 593 மதிப்பெண்களும் பெற்றனர். இந்த 2 மாணவிகளுக்கும் கனிமொழி எம்.பி. தலா ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்