வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணி

Update: 2022-11-26 16:41 GMT


காங்கயம் அருகே வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.

ரூ.4 கோடியில் தடுப்பணை

காங்கயம் தாலுகா வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையம் பகுதிகளில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய கட்டடத்தினை திறந்து வைத்தும், ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியையும் தமிழக செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பி.முத்துசாமி, செயற்பொறியாளர் (நீர்வளஆதாரத்துறை) கோபி, ஆவின் பொது மேலாளர் ஏ.பி.நடராஜன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வடசின்னாரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பி.மகேஸ்வரி பிரகாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறிவட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே

ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணியதாவது:-

700 ஏக்கர் பாசனம் பெறும்

தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கம் 1981-ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 268.04 மில்லியன் கன அடியாகும். வட்டமலைக்கரை ஓடையானது அமராவதி ஆற்றின் கிளை ஆறு ஆகும்.

இந்த ஓடை பல்லடம் பொள்ளாச்சி சாலையில், அனுப்பட்டி கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது. இத்தடுப்பணையானது 50 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டர் உயரத்திலும், சுமார் ஒரு நிரப்புக்கு 0.50 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 3 நிரப்புகளுக்கு 1.50 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 704 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெறும். மேலும், இத்தடுப்பணையின் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 56 கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடிநீர் செறிவூட்டப்படும். இதனால் விவசாய உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்